தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் – இரங்கல் தீர்மானம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இன்று கேள்வி நேரம் நேரடியாக ஒளிபரப்பு.
ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கி நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை வரை மட்டும் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இரண்டாவது நாளான இன்று தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. அப்போது, மறைந்த முன்னாள் ஆளுநர் ரோசய்யா, முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 11 இராணுவ வீரர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் துரைமாணிக்கம், புனீத் ராஜ்குமார் ஆகியோர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது
இதன்பின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடக்கிறது என்றும் பின்னர் ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் பதிலுரை அளிப்பார் எனவும் கூறப்படுகிறது. மேலும், தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இன்று கேள்வி – பதில் நேரம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025