நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கடக்கோடு கிராமம் அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கருஞ்சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக நீலகிரி கட்பெட்டு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த சரக உதவி வனப்பாதுகாவலர் சரவணகுமார் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அதில், இறந்து கிடந்த கருஞ்சிறுத்தையின் உடல் பாகங்களை பரிசோதனை செய்து ஆய்விற்குட்படுத்தினர்.இதில், இறந்தது சுமார் 3 வயது மதிக்கத்தக்க பெண் கருஞ்சிறுத்தை என்பது தெரிய வந்தது. இந்நிலையில், இந்த கருஞ்சிறுத்தை இறப்புக்குறித்து வனத்துறை அதிகாரிகள் கூரியதாவது, கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட கடக்கோடு பகுதியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட கருஞ்சிறுத்தையின் உடலை கால்நடை மருத்துவர் ராஜன் தலைமையில் மருத்துவர்கள் பிரேத பரிசோதனை ஆய்வு செய்து ஆய்வு மாதிரிகளை எடுத்துள்ளனர். இந்த கருஞ்சிறுத்தை நோய் தொற்று ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தனர். நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில கருஞ்சிறுத்தைகள் மட்டுமே வாழ்கின்றன. அதில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சக்கம்பை பகுதியில் ஒரு கருஞ்சிறுத்தை விஷம் வைத்து கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…