அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவர்கள் விடுத்துள்ள அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, “கடந்த 1992 டிசம்பர் மாதம் 6-ஆம் தேதி இந்து மதத் தலைவர்களாலும், கரசேவகர்களாலும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் நாட்டை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ஆர்.எஸ் எஸ், விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் ஒருங்கிணைந்து, நாடு முழுவதும் மதவெறியூட்டப்பட்ட ‘கரசேவகர்’களைத் திரட்டி, பயிற்சியளித்து, பாபர் மசூதியை இடித்துத் தகர்த்தன.மேலும், அந்தக் கொடுங்குற்றச் செயலை நியாயப்படுத்தியே வந்துள்ளன. இந்நிலையில் அயோத்தி பாபர் மசூதி – ராம ஜென்ம பூமி தொடர்பான ‘நிலம்‘ குறித்த தகராறாக முன் வைக்கப்பட்ட உரிமையியல் வழக்கில் உச்ச நீதிமன்றம், ஆவண சாட்சியங்களையும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாரத்தையும் அலட்சியம் செய்து விட்டு, ’நம்பிக்கையை’ ஆதாரப்படுத்தி அளித்த இறுதித் தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது ’கொடுங்குற்றச் செயல்’ என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உறுதிபடக் கூறியிருந்தது.
இந்நிலையில், அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய பாஜக முக்கிய புள்ளிகளான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால் உட்பட அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். மதவெறி தூண்டுதலால் இழைக்கப்படும் குற்றங்களுக்கு தண்டனை ஏதும் இல்லை என்றால், குற்றச் செயல்களில் இனி பலரும் எந்த அச்சமுமின்றி ஈடுபடுவார்கள். இந்த செயல், ‘ பல விபரீத விளைவுகளுக்கு’ பச்சைக் கொடி காட்டுவதாகவே அமைந்துள்ளது.
அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட குற்றச் சம்பவங்களை நொடிக்கு, நொடி இடைவிடாமல் மின்னணு ஊடகங்கள் ஏற்கனவே வெளியிட்டிருக்கின்றன. அச்சு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தொகுக்கப்பட்ட ஆவணங்கள் பதிவாகியுள்ளன. ஆய்வாளர்கள் விரிவாக கள ஆய்வு செய்து, அசைக்க முடியாத ஆதாரங்களோடு குற்றச் செயலையும், குற்றவாளிகளையும் அடையாளங்காட்டியுள்ளனர். இவைகள் எதனையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லாமல் மத்திய புலானாய்வுத்துறை படுதோல்வி அடைந்திருப்பது மகாக் கேவலமாகும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…