சிவகங்கை மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் பிரவீனின் நாக்கு 10.8 செ.மீ நீளமாக காணப்படுகிறது.
சாதாரணமாக ஆண்களின் நாக்கு 8.5 செ.மீ-ரும், பெண்களின் நாக்கு 7.5 செ.மீ-ரும் வளரும் என கூறப்படுகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் பிரவீனின் நாக்கு மிகவும் நீளமாக காணப்படுகிறது. அவரது நாக்கின் நீளம் 10.8 செ.மீ ஆகும்.
இந்த நாக்கை வைத்து அவர், 110 முறை மூக்கை நாக்கால் தொட்டுள்ளார். 142 முறை முழங்கையை தொட்டுள்ளார். தமிழில் உள்ள 247 எழுத்துக்களையும் ஒரு மணி 22 நிமிடம் 26 வினாடிகளில் நாக்கால் எழுதி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இல் இடம் பெற்றுள்ளார். ஒரு நிமிடத்தில் 219 முறை மூக்கைத் தொட்டு ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்சில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றுள்ளார். ‘indiaன் logest togue’ என்ற டைட்டிலை பெற்றுள்ளார்.
இவர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் படங்களை தனது நாக்கினால் வரைகிறார். நாக்கில் கிளவுஸ் அணிந்து பெய்டினை தொட்டு சார்ட்டில் தமிழ் எழுத்துக்களை எழுதியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய அளவில் எனது சாதனைகள் பதிவு செய்யப்பட்டாலும் பொருளாதார உதவிகள் இல்லாத காரணத்தால் உலக அளவில் சாதனைகளை பதிவு செய்ய முடியவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் 1330 குறள்களையும் நாக்கால் எழுதி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவேன் என்றும், தேசிய தலைவர்களை பெரிய அளவில் வரைய உள்ளேன் என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த நிக் ஸ்டோபல் என்பவர் தான் உலகில் மிக நீளமான நாக்கை கொண்டவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். 2012-ம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்திய போது, அவரது நாக்கின் நீளம் 10.1செ.மீ. இதை வைத்து பார்க்கையில், பிரவீனின் நாக்கு நீளமாக தான் காணப்படுகிறது.எனவே இவர் கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடிக்கக் கூடிய தகுதியை பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…