வயலில் இறங்கி விவசாயிகளுடன் சேர்ந்து நடுவு நட்ட தமிழக முதல்வர்.!

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து, அதற்கான மசோதாவை நிறைவேற்றம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திருவாரூரில் மாவட்டத்தில் இன்று நடைபெறவிருக்கும் பாராட்டு விழாவிற்கு முதல்வர் வந்தடைந்தார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கோயில்வெண்ணியை அடுத்த சித்தமல்லி என்ற இடத்தில், தன்னை வரவேற்ற விவசாயிகளுடன் உரையாடியபடியே முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி சென்றார். அப்போது கோடை சாகுபடிக்கான நடவுப் பணி நடைப்பெற்றது. இதில் முதலமைச்சரும் விவசாயிகளுடன் சேர்ந்து நடவு நட்டார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025