மதுரையை சேர்ந்த வேல்முருகன் என்பவர் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இவரது உறவினர்கள் வேல்முருகனின் உறுப்புகளை தானம் செய்ய விரும்பினர். இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக வெங்கடேஷ் என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு வேல்முருகனின் சிறுநீரகத்தை பொருத்த திட்டமிடப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து சுமார் மூன்றரை மணி நேரத்தில், சிறுநீரகம் நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை சீராக்க 150 போலீசார் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாகர்கோவில் மாநகரில் உள்ள குறுகலான சாலையில், ஆம்புலன்ஸ் செல்ல முடியாத நிலையில், கார் மூலம் சிறுநீரகம் கொண்டு வரப்பட்டது. அதன் பின் அந்த சிறுநீரகம் வெங்கடேசுக்கு பொருத்தப்பட்டது. மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஒட்டி வந்த ஓட்டுனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…
சென்னை: தமிழ் திரைப்பட நடிகர்களான ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தாக்கல் செய்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து…
டெலவேர் : அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தைச் சேர்ந்த 35 வயது ஜெனிபர் ஆலன், ChatGPT-யின் வழிகாட்டுதலுடன் ஒரே மாதத்தில் ரூ.10…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக சமீபத்தில் அறிவித்திருந்தது. எனவே, இது குறித்து அரசியல்…