கோவை : பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சென்ற ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும், அந்த பெண்ணுக்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் காயத்ரி. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, காயத்ரியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த […]
தலைமை செயலகத்துக்கு செல்லும் வழியில், விபத்தில் காயமடைந்தவர்களை தலைமை செயலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து மருத்துவமனைக்கு அனுப்பி வாய்த்த தலைமை செயலாளர். தலைமைச் செயலாளர் இறையன்பு அவர்கள் சென்னை நேப்பியர் பாலம் அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்டு கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளது. தலைமை செயலகத்துக்கு செல்லும் வழியில், விபத்தில் காயமடைந்தவர்களை தலைமை செயலாளர்கள் மீட்டு ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி […]
பாதி வழியில் பழுதாகி நின்ற ஆம்புலன்ஸை இரண்டு நபர்கள் தங்களது பைக்கால் தள்ளி கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் வைராலகி வருகிறது. டெல்லில், ஹரி நகரில் உள்ள தீன் தயாள் உபாத்யாய் (DDU) மருத்துவமனைக்கு ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் வந்துள்ளார். ஆனால் வரும் வழியில் அந்த ஆம்புலன்ஸ் பழுதாகி நின்றுவிட்டது. இதனால், இருநபர்கள் தங்களது பைக்கால் அந்த ஆம்புலன்ஸை சுமார் 12கிமீ தள்ளி சென்றனர். என டெல்லி பாஜக செய்தி தொடர்பாளர் தஜிந்தர் பால் […]
சிவகங்கை மாவட்டம் செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று மரத்தில் மோதியதில் கர்ப்பிணி பெண் உட்பட 2 பெண்கள் உயிரிழப்பு. சிவகங்கை மாவட்டம் செங்குளம் பகுதியில் ஆம்புலன்ஸ் ஒன்று கர்ப்பிணி பெண்ணை ஏற்றி சென்ற நிலையில், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த ஆம்புலன்சில் 21 வயதான கர்ப்பிணி பெண் நிவேதா மற்றும் அவரது தாயார் இருந்தனர். இந்த நிலையில், இந்த விபத்தில், கர்ப்பிணிப் பெண் நிவேதா மற்றும் தாய் விஜயலட்சுமி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஆம்புலன்ஸ் […]
₹1,000 செலுத்தத் தவறியதால் கர்ப்பிணிப் பெண்ணை உத்திர பிரதேச சாலையில் விட்டுச் சென்ற ஆம்புலன்ஸ். உத்திரபிரதேசத்தில் கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பத்தினரிடம் ஆம்புலன்ஸிற்கு பணம் செலுத்த போதிய பணம் இல்லாததால் ஆம்புலன்ஸ் டிரைவர் கர்ப்பிணிப் பெண்ணை சாலையில் விட்டுச் சென்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், கர்ப்பிணிப் பெண் சாலையில் அமர்ந்திருப்பதைக் காணலாம், அவரது குடும்பத்தினர் அவருக்கு உதவ முயற்சிக்கிறார்கள். மேலும் அந்த ஆம்புலன்ஸ் விட்டு செலாவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. குடும்பத்தினர் ₹1,000 செலுத்தத் தவறியதால் […]
ஆந்திராவில் மகனின் உடலை கொண்டு செல்ல தனியார் ஆம்புலன்ஸ் ஊழியர் அதிகப்படியான பணம் கேட்டதால், இருசக்கர வாகனத்தில் வைத்தே கொண்டு சென்ற தந்தை. ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த பெத்வேல் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் நரசிம்மலு. இவரது மகன் ஜெசேவா சிறுநீரகம் பாதிக்கப் பட்ட நிலையில், ரூயா என்ற மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், சிறுவன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து தனது மகனின் உடலை மருத்துவமனையிலிருந்து சொந்த […]
ஆம்புலன்சில் வைத்து கடத்தப்பட்ட 1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் ஆம்புலன்சில் வைத்து கஞ்சா கடத்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து இலங்கைக்கு கஞ்ச கடத்த முயன்றது விசாரணையில் ’69தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஒரு கோடி மதிப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சாவை கடத்தி வந்த நாகையை சேர்ந்த டெரன்ஸ் ராஜா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவை முதல் முறையாக காகிதமில்லாபட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அப்போது , முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ509.56 கோடி நன்கொடையாக வழங்கப்பட்டு உள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ. 241.40 கோடி நிதிஉதவி தரப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு தமிழ்நாட்டில் 8 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திறன் அரசுக்கு இருக்கிறது. 8 லட்சம் தடுப்பூசி போடுவதற்கான […]
தமிழக சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை, 1,303-ஆக உயர்த்தப்படும் என்றும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் ரூ.1,046 கோடியில் […]
தலைமை செயலகத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். அண்ணா நூற்றாண்டு நூலக நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு சென்னை தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 108 ஆம்புலன்ஸ் வாகனம் சேவையை தொடங்கி வைத்துள்ளார். 1.77 கோடி மதிப்பில் 10 ஆம்புலன்ஸ்களைத் கரூர் வைஸ்யா வங்கி வழங்கியது. இந்த புதிய 10 ஆம்புலன்ஸில், 8 ஆம்புலன்ஸ்கள் மலைப்பகுதியில் பயன்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், மா சுப்பிரமணியன். எ.வ.வேலு மற்றும் உயரதிகாரிகள் […]
கேரளாவில் கொரோனா நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள கண்ணூரை அடுத்த சுண்டபாறை பகுதியை சேர்ந்த பிஜோய் எனும் 45 வயது நபர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இவரது உடல்நிலை மோசமானதை அடுத்து, இவர் கண்ணூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இவரை ஏற்றி சென்ற பொழுது ஆம்புலன்சில் விஜய்யின் சகோதரி […]
சென்னையில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முதலமைச்சரின் கார் வழிவிட்டு ஒதுங்கிய வீடியோ பதிவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 29ஆம் தேதி கோயம்புத்தூர் செல்வதற்காக முதலமைச்சர் சென்னை விமான நிலையம் சென்றபோது, அதே வழியில் ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சென்று உள்ளது. இதனை கண்ட முதலமைச்சரின் கார், அந்த ஆம்புலன்ஸ் வாகனம் செல்வதற்காக தன்னுடைய வாகனத்தை ஓரமாக ஒதுக்கி உள்ளது. இது குறித்த வீடியோவை தற்போது சென்னை காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு […]
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால், சரக்கு வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட கொரோனா நோயாளி. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் சில மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. நோயாளிகளை ஏற்றி செல்லும் அம்புலன்ஸ்களும், இந்த சமயங்களில் கிடைப்பது […]
ஹரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்புலா பகுதியை கொரோனா சிகிச்சைக்காக 5 மினி பஸ்கள் ஆம்புலன்களாக மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் தினமும் உயிர் இழந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பெரும்பாலும் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதித்தவர்களை […]
கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் டெல்லி தனியார் ஆம்புலன்ஸ் சேவைகள் அதிகபட்ச கட்டணம் வசூலிக்கும் நிலையில், இந்த ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான கட்டணத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் ஒருவருக்கொருவர் உதவி மனிதநேயத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும். இந்நிலையில், தனியார் சேவைகள் பல மக்களுக்கு ஒரு புறம் உதவுகிறது, ஆனால், மறுபுறம் சுரண்டுகிறது. இந்நிலையில், […]
மனைவியின் நகைக்களை விற்று ஆட்டோவை கோவிட் அம்புலன்ஸாக மாற்றிய ட்ரைவர். இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேசத்தின் போபாலில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஆட்டோ ரிக்ஷா டிரைவர் ஜாவித் கான் என்பவர் தனது ஆட்டோவை கோவிட் நோயாளிகளை இலவசமாக கொண்டு […]
டெல்லியில் 4 கி.மீ தூரத்திற்கு ஆம்புலன்ஸ் வாடகை ரூ.10,000 பெறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக, காட்டு தீ போல் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், இந்தியாவில், தினசரி பாதிப்பு 3.50 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், […]
கொரோனா வைரஸுடன் மோசமாக போராடும் இந்தியாவுக்கு உதவ பாகிஸ்தானின் “எடி அறக்கட்டளை” முன்வந்துள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தினமும் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இதனால், மாநிலங்களின் பல்வேறு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ஆக்ஸிஜன், தடுப்பூசி உள்ளிட்டவை தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானை சேர்ந்த எடி அறக்கட்டளை இந்தியாவிற்கு 50 ஆம்புலன்ஸ்களை வழங்க விரும்புவதாக தெரிவித்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கொரோனாவை சமாளிக்க இந்தியாவுக்கு 50 ஆம்புலன்ஸ் வழங்க […]
கொட்டும் மழையில் 108 புதிய ஆம்புலன்ஸ்களின் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது, அந்த கொட்டும் மழையிலும் 108 அவசர கால ஊர்தி சேவைக்கான 24 கோடியே 77 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 108 எண்ணிக்கையிலான புதிய அவசர கால ஊர்தி சேவைகளை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று துவங்கி வைத்தார். இதற்கிடையில், […]
கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர் ஆம்புலன்ஸில் அமர்ந்து தேர்வெழுதிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள பொது சேவை ஆணைய வேட்பாளரான கோபிகா கோபன் கடந்த சில நாட்களாக உதவி பேராசிரியர் பதவிக்கு அதாவது பி.எஸ்.சி தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். அந்த தேர்வு முதலில் ஜுலை மாதம் நடத்த திட்டமிட்டிருந்த வேளையில் கொரோனா தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதனையடுத்து, பி.எஸ்.சி தேர்வு நவம்பர் 2-ஆம் தேதி நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே கடந்த சனிக்கிழமை கோபிகா […]