குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட 18 திமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த மனுவை நாளை விசாரிக்கிறது உயர்நீதிமன்றம்.
தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அண்மையில் உரிமை மீறல் நோட்டீஸை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.அதில், ‘ குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் ‘ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியதில் சில குறைபாடுகள் உள்ளதால் மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது நீதிமன்றம்.
இதனையடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பேரவை உரிமை மீறல் குழு கூட்டம் கூடியது.பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்நிலையில் இந்த மனுவை நாளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கிறது.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…