சென்னையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழா நிறைவுபெற்ற பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், குடியுரிமை திருத்த சட்டமானது பல லட்ச அகதிகளுக்கு நிம்மதியான வாழ்விற்கு வழிவகை செய்கிறது. இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு, குடியுரிமை திருத்த சட்டமானது, எதிரானது என்று கருதப்படுவது தவறானது. இதில் உண்மை இருப்பின் முதலில் எதிர் குரல் கொடுக்கும் கட்சியாக நாங்கள் இருப்போம்
மத்திய அரசு சட்டங்களையும், கோட்பாடுகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்துவது அவர்களது கடமையாகும். சந்தேகங்கள் முழுமையாக தீர்க்கப்பட வேண்டும். இந்தியாவின் முன்னேறத்திற்கு, இஸ்லாமியர்ககின் பங்கு பெரும்பான்மையானது, எதிர் காட்சிகள் இது போன்ற பிரச்சனைகளை ஆக்க பூர்வமாக அணுக வேண்டும் என்றும், மதநல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த கூடாது. இலங்கை தமிழர்களுக்கு 100 சதவீதம் குடியுரிமையை சொந்த நாட்டிலே சிங்களர்களுக்கு இணையாக வளர்ச்சி, மறுவாழ்வாதாரம், பாதுகாப்பு கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.இதனை விரும்பாத ஒத்த கருத்து இல்லாதவர்களுக்கு மட்டுமே இரட்டை குடியுரிமை வழங்க கூடிய நிலை ஏற்படுத்த வேண்டும் என்பதே பெரும்பான்மையினர் கருத்தாக இருக்கிறது என்று தெரிவித்தார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…