விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும் என கமலஹாசன் ட்வீட் செய்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டெல்லியில் விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கும், விவாசாயிகளுக்கும் இடையே பலகட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற போதிலும், இதுவரை இந்த போராட்டத்திற்கு எந்த முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இன்றுடன் பிரதமர் மோடி பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில், இந்த நாளை கறுப்பு தினமாக அனுசரிக்க விவசாயிகள் அமைப்பு முடிவு செய்துள்ளது. இதற்கு, மேற்கு வங்க முதல்வர், டெல்லி முதல்வர் மற்றும் தமிழக முதல்வர் உட்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள் விவசாயிகளின் போராட்டம் குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கொரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…