ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் வானவில் பண்பாட்டு மையம் சார்பில் பாரதியாரின் நினைவு நாள் நூற்றாண்டு விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்,மத்திய பண்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெக்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிலையில்,இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கூறியதாவது,”பல ஆயிரம் சிந்தனைகளை கொண்டவர் பாரதி,அவரது கவிதை மற்றும் பாடல்களை மக்களின் மனதிலிருந்து நீக்க முடியாது, பாரதியின் பாதை புதிய சமூகம் அமைக்கும் பாதை.தமிழ் வெறியோடு பாடக்கூடிய பாரதியார் இன்றும் தேவைப்படுகிறார்.இயேசு கிறிஸ்துவை புகழ்ந்து எழுதி விட்டு, ஓம் சக்தி என்று முடிக்கும் சகோதரத்துவ பாரதி இன்றும் தேவைப்படுகிறார். அல்லாவுக்கு பாட்டு எழுதிய பரந்த மனப்பான்மை கொண்ட பாரதி இன்றும் தேவைப்படுகிறார்.அன்பு, அறிவு, கல்வி, நீதி என இந்த நான்கும் கொண்டவர்கள் மேலோர்; மற்றவர்கள் கீழோர் என்பதே பாரதியின் கருத்து. நூற்றாண்டுகளுக்கு பின்னரும் பாரதியின் பாடல்கள் மக்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்தும்”, என்று கூறியுள்ளார்.
மேலும்,முதல்வர் பேசுகையில்,”ஒரு கட்சியின் அரசாக இல்லாமல் கொள்கையின் அரசாக திமுக அரசு இருக்கும்,இது எனது அரசு அல்ல நமது அரசு,” என்றும் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…