மதுரை மாவட்டத்ததில் உள்ள மேலூர் அருகே உள்ள கந்தல் பட்டியை சேர்ந்தவர் ரேவதி ஆவார்.சுமார் 16 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் பணியாற்றி வந்துள்ளார்.
அந்த மில்லுக்கு சொந்தமான வேனில் தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார்.அப்போது வென் ஓட்டுநரான ராஜாவுக்கும் சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.முதலில் அந்த சிறுமியிடம் ராஜா சாதாரணமாக பழகிவந்துள்ளார்.
பின்னர் தொடர்ந்து நெருங்கி பழகியுள்ளார்.அந்த சிறுமி கடந்த கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வழக்கம் போல வேனில் வேலைக்கு சென்றுள்ளார்.பின்னர் வீட்டிற்கு வரும் போது ஆள் இல்லாத இடம் பார்த்து அங்கு சிறுமியை ராஜா பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அங்கு நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதனால் பதறிப்போன சிறுமி வெளியே கூறாமல் மறைத்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் சோகமாக இருந்த சிறுமியிடம் உறவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அழுத நிலையில் அந்த சிறுமி தனக்கு நடந்த கொடுமையை அவர்களிடம் கூறியுள்ளார்.இதனை கேட்ட அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதன் காரணாமாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பின்னர் புகாரின் அடிப்படையில் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவான ராஜாவை தேடிவருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…