ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நீட் தேர்வு நாளை நடைபெற உள்ளது.இதனிடையே மதுரையில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வரும் முருக சுந்தரம், இவரது மகள் ஜோதி ஸ்ரீ துர்கா கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்றும் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கவில்லை, ஆனால் மாணவி தொடர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஜோதி ஸ்ரீ துர்கா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை வரை தேர்வுக்கு படித்துள்ளர். தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நீட் தேர்வு அச்சம் இன்னோர் உயிரைப் பலி வாங்கியிருக்கிறது. மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த துயரம் தொடருமோ? என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…