சென்னை:ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு ஏற்பாடு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகம் முழுவதும் நேற்று 23,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னையில் நேற்று மட்டும் 8978 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருந்து தொகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி,மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள்,நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளில் மருந்து தொகுப்பு தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து காத்திருப்போருக்கு முடிவுகள் வரும் முன்னே மருந்து தொகுப்பு வழங்கப்படவுள்ளது.அந்த வகையில்,வைட்டமின் சி,ஜிங்,பாராசிட்டாமல் உள்ளிட்ட மாத்திரைகள்,கபசர குடிநீர்,3 அடுக்கு கொண்ட முகக்கவசம் போன்றவை தரப்படுகின்றன.அதேசமயம், சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்துதலில் இருப்போருக்கும் மருந்து தொகுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் (ஜூலை 27, 2025) கடைசி நாளில், இங்கிலாந்து அணியின் கேப்டன்…
சென்னை : தமிழகத்தில் உள்ள எல்பிஜி கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) உள்ளிட்ட எண்ணெய்…
பத்தனம்திட்டா : சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று (ஜூலை 29, 2025) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தமிழகத்தில்…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று 29-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து மக்களவையில் இன்று (ஜூலை 29) பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க…
சனா : ஏமன் சிறையில் உள்ள மலையாளி செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக இந்தியாவின் கிராண்ட்…