Income Tax department Raid [Representative Image]
எம்சி சங்கர் ஆனந்தின் பண்ணை வீட்டில் சிஆர்பிஎஃப் வீரர்களுடன் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்துறை மற்றும் டாஸ்மாஸ் அரசு ஒப்பதாரர்கள் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இந்த நிலையில், கரூரில் 7வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதன்படி, கரூரில் அமைச்சர் செந்தி பாலாஜியின் நண்பரும் அரசு ஒப்பந்ததாரருமான சங்கர் ஆனந்த் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எம்சி சங்கர் ஆனந்துக்கு சொந்தமான “சங்கர் ஃபார்ம்ஸ்” பண்ணை வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வாகனங்களில் வந்த 6 வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…