அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்-லைன் வழி கல்வி கற்பிக்கப்படும் என நேற்று கூறியிருந்த நிலையில் இன்று மறுப்பு தெரிவித்துள்ளார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால்,பள்ளிகள்திறக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாணவர்களின் நலன்கருதி பல பள்ளி நிர்வாகம், ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே தமிழகத்தில் கொரோனா தொற்றின் காரணமாக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதனோடு மட்டுமின்றி பொதுத்தேர்வு எழுதவுள்ள அனைத்து மாணவர்களும் தாங்கள் பெற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் எனவும் அரசு அறிவித்தது.
இதனிடையே ஜூலை 13-ஆம் தேதிக்கு பிறகு ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று கூறினார். தனியார் பள்ளிகள் போன்று அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும்.மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆன்-லைன் வழி கல்வி இல்லை – டிவி மூலம் பாடம் கற்பிக்க திட்டம் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…