கோவை மாவட்டம் துடியலூர் அருகே உள்ளது மீனாட்சி கார்டன் குடியிருப்பு பகுதியில் 245 வீடுகள் உள்ளன. அது ரயில்பாதையின் அருகில் அமைந்திருக்கும் இந்த குடியிருப்பு பகுதியில் சமீபகாலமாக யாரோ ஒரு நபர் பெண்களின் உள்ளாடைகள், செருப்புகள் உட்பட திருடிச் செல்கிறார் என்று, மக்கள் மத்தியில் பரபரப்பும் நிலவியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ஓரே நேரத்தில் உள்ளாடைகளும், செருப்பும் காணாமல் போன நிலையில் குடியிருப்பு வாசிகள் அவற்றைத் தேடியுள்ளனர். பின்னர் அதே பகுதியில் உள்ள ஆளில்லாத வீடு ஒன்றில் செருப்புகளும் உள்ளாடைகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதைத்தொடர்ந்து, அப்பகுதியில் சிசிடிவி கேமரா இருந்ததால், அந்த காட்சிகளை ஆய்வு பார்த்தபோது திருடன் ஒருவன் பெண்கள் அணியும் நைட்டி, சுடிதார் டாப்ஸ் மற்றும் கொலுசுகள் அணிந்தபடி திருட வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இந்தக் காட்சிகளை பார்த்து அதிர்ச்சியடைந்த குடியிருப்புவாசிகள் துடியலூர் காவல் நிலையத்தில் உடனடியாக புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து வீடுகளில் சிசிடிவிக்களை பொருத்தி, சுற்றுச் சுவரை உயர்த்தி அதில் கம்பிகளைப் பொருத்தி பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்னர் அப்பகுதி குடியிருப்பு வாசிகள்.
மேலும், குடியிருப்புவாசிகள் குழுக்களாக பிரிந்து இரவு நேரங்களில் ரோந்துப் பணிகளையும் மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் அந்த நூதன திருடன் அதேபோல் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் செருப்புகளைத் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. மேலும், திருடிய அனைத்தையும் ஆளில்லா இடத்தில் போட்டு எரித்துள்ளார், இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். பிறகு குடியிருப்பு வாசிகள் ஏற்கனவே கொடுத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் துடியலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அந்த சைக்கோ திருடனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…