தமிழ்நாட்டை விளையாட்டுத்துறைக்கான தலைநகரமாக மாற்றுவதுதான் ஒரே நோக்கம் -அமைச்சர் உதயநிதி

தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என அமைச்சர் உதயநிதி பேட்டி.
சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் ஸ்குவாஷ் உலகக்கோப்பை நடைபெறுவதால் விளையாட்டுத்துறை பெருமைப்படுகிறது; தமிழ்நாட்டை விளையாட்டின் தலைநகரமாக மாற்ற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.
ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும். தமிழக முதல்வர் தமிழகத்தில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025