சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார் குடியரசு தலைவர்!

Published by
கெளதம்

சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. நேற்று நீலகிரி வந்தடைந்த அவர் தெப்பக்காடு பகுதியில் உள்ள யானைகள் முகாமுக்கு சென்று, பழங்குடி தம்பதி பொம்மன் – பெள்ளி சந்தித்தார். பின்னர், நேற்று மாலை நீலகிரியிலிருந்து சென்னை வந்தடைந்த திரௌபதி முர்முக்கு, தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதல்வர் வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், இன்று காலை சென்னை பல்கலைக்கழகத்தின் 165-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினார். பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி,  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜனாதிபதி வருகை வரலாற்று முக்கியத்துவம். குடியரசு தலைவர் வருகை சென்னை பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் 18 தமிழ்நாட்டில் உள்ளன.

பள்ளிக் கல்வியை காமராஜர் வளர்த்தார், கல்லூரிக் கல்வியை கருணாநிதி வளர்த்தார், தற்போது திராவிட மாடல் ஆட்சியில் உயர்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம். ஏராளமான குடியரசுத் தலைவர்கள் படித்த பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பேரறிஞர் அண்ணா சென்னை பல்கலையில் தான் படித்தார், நானும் இங்கு தான் படித்தேன் என்று பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனவர்களுக்கு உரையாற்றினார்.

Published by
கெளதம்

Recent Posts

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…

5 hours ago

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’ – விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…

5 hours ago

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

6 hours ago

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

6 hours ago

தொடர் போர் பதற்றம்.., உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் ராஜினாமா.!

உக்ரைன் : ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் இன்று (ஜூலை 15) தனது…

7 hours ago

இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி.!

லண்டன் : கடைசி நாள் வரை நீடித்த லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை…

7 hours ago