மாணவர்களின் கதாநாயகனாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் ரீல் தான் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூட்டத்தில் பேசியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் 31 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் நிகழ்ச்சியை துவங்கி வைத்து அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளதாகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பின்பு ஆட்சிக்கு வந்து விவசாயிகளின் கடன்கள் பலவற்றை எடப்பாடி அவர்கள் தள்ளுபடி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் என்றால் மக்களுக்கு வேண்டிய பணிகளை செய்யுங்கள் என எடுத்துரைப்பது தான் கடமை.
அதை அதிமுக அரசு ஏற்றுக்கொண்டு செய்கிறது என்பதை மு க ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் மாணவர்களின் கதாநாயகனாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் இருக்கிறார். கொரோனா காலத்தில் தமிழக முதல்வர் நிவாரணம் வழங்கியதுடன் மாணவர்களுக்கு என்ன வேண்டும் என யோசித்தது முதல்வர் தான். மேலும் ஒரு ஆண்டு பள்ளி இயங்காததால் மாணவர்களின் கல்வி ஆண்டு வீணாகிவிடும் என்று அனைவரையும் ஆல்பாஸ் செய்தவரும் முதல்வர் தன் என தெரிவித்துள்ள அவர், மு க ஸ்டாலின் எல்லாவற்றிலும் அரசியல் செய்து பழக்கப்பட்டவர் எனவும், செட்டப் செய்து நாடகம் நடத்துவது மு க ஸ்டாலின் தான் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமி ரியல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் ரீல் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…