+2 தேர்வு தொடர்பாக நாளைக்குள் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்- அன்பில் மகேஷ் ..!

Published by
murugan

பிளஸ் டூ தேர்வு தொடர்பாக நாளைக்குள் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்தும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எவ்வாறு தேர்ச்சி வழங்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் செயலாளர் தீரஜ் குமார், ஆணையர் நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ் 2 தேர்வை ஆன்லைனில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உரிய ஆலோசனை வழங்க வேண்டும். கொரோனாவால்  உயிரிழந்த ஆசிரியர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தனியார் பள்ளிகள் பெற்றோரை கட்டாயப்படுத்தி கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவுறுத்தி உள்ளோம். கட்டாயப்படுத்தாமல் அரசு அனுமதித்துள்ள கட்டணத்தை தனியார் பள்ளிகள் வசூலிக்கலாம் எனகூறினார். பிளஸ் டூ தேர்வு தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து நாளைக்குள் மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கப்படும்.

பத்ம சேஷாத்ரி பள்ளியில் நடைபெற்ற பாலியல் தொல்லை குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, புகார்கள் அளிக்கப்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பி.எஸ்.பி.பி. பள்ளி நிர்வாகம் உறுதிஅளித்துள்ளது என தெரிவித்தார்.

ஆசிரியர் ராஜகோபலன் மீது நடவடிக்கை எடுக்க எம்.பி கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நடவடிக்கை எடுக்க கோரி  வலியுறுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!

கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…

56 minutes ago

போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!

ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…

1 hour ago

இஸ்ரேல் – ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் – அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…

2 hours ago

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

12 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

13 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

13 hours ago