மகாராஷ்டிரா விவகாரம் ..! கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக் கூடாது-விஜயகாந்த் பிரேமலதா..!

இன்று கட்சி நிர்வாகியின் திருமணத்திற்காக தேமுதிக பொருளாளர் விஜயகாந்த் பிரேமலதா மதுரை வந்து உள்ளார்.அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு உள்ளனர். அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக் கூடாது.
நேர்மையான முறையில் பெரும்பான்மையை நிரூபித்து விட்டு பாஜக ஆட்சி அமைத்திருக்கலாம் என கூறினார். மக்கள் தினமும் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
உள்ளாட்சி தேர்தலுக்கு தேதி அறிவிக்கவில்லை. முதலில் தேதி அறிவிக்கட்டும் பின்னர் அதன் எத்தனை இடங்கள், எங்கு போட்டியிடுவது போன்றவை குறித்து முடிவு செய்யலாம் என கூறினார்.
மறைமுக தேர்தல் என்பது தி.மு.க ஆட்சியிலேயே இருந்து உள்ளது.இதனால் தற்போது அரசு
அறிவித்ததில் தவறு இல்லை எனவும் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025