என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்துள்ளார்கள் என்று வீடியோ குறித்து புகழேந்தி விளக்கம் அளித்துள்ளார்.
அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.கோவையில் அவரது கட்சினருடன் பேசிய வீடியோவில் ,கட்சியில் யாரிடமும் போய் நிற்க வேண்டிய அவசியமில்லை.முகவரி இல்லாத தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்றும் பல போராட்டங்களில் அவருக்கு உறுதுணையாக இருந்தது நான் தான் என்றும் தெரிவித்தார்.இவரது இந்த பேச்சு அமமுக வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக புகழேந்தி விளக்கம் அளிக்கையில்,கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நீக்கம் செய்தது சரியல்ல.இந்த நீக்கம் குறித்து வருத்தப்பட்டேன்.வீடியோவில் நான் கட்சி நிர்வாகிகள் நீக்கம் குறித்து தான் விவாதித்தேன் என்று தெரிவித்தார்.ஆனால் என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்துள்ளார்கள்.என்னுடைய அறையில் நான் எனது கட்சி நிர்வாகிகளுடன் பேசும் வீடியோவை பதிவு செய்து,நான்கு சுவருக்குள் நடக்கும் விவகாரத்தை நாடெங்கும் பரப்பியது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.மேலும் யாரையும் கட்சியை விட்டு நீக்காதீர்கள் என்று தினகரனுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி புதன்கிழமை (ஜூலை 2) பர்மிங்காமில் தொடங்கியது.…
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…