சிவகங்கை அருகே இளைஞரின் நெஞ்சில் பாய்ந்த சுழுக்கியை மருத்துவர்கள் எக்ஸ்ரே உதவியுடன் எடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடிக்கு அருகில் உள்ள உஞ்சனை கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவருக்கு 20 வயது ஆகும். இந்த இளைஞர் தவறி கீழே விழுந்த போது ’சுழிக்கி’ என்ற எலி குத்தும் ஆயுதம் நெஞ்சில் பாய்ந்துள்ளது.
இவரது வீட்டின் பின்புறம் விவசாய நிலங்கள் உள்ள நிலையில் வீட்டை சுற்றி எலிகள் தொல்லை இருந்து வந்தது.எனவே எலிகள் வீடுகளைச் சுற்றி தொல்லை கொடுத்து வந்துள்ளன.இந்த சமயத்தில் எலிகளை விஜய் விரட்டுவது வழக்க மாக இருந்தது. இந்நிலையில் தான் நேற்று இரவு விஜய் எலிகளை விரட்ட சென்றுள்ளார். அந்த சமயத்தில் கீழே விழுந்த போது எலியை குத்தும் சுழிக்கி, அவரது வலது மார்பில் பாய்ந்தது. இதனால் வலியால் துடித்த அவரை காரைக்குடி மருத்துவமனையில் அனுமதி அளித்தனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் விஜயை மருத்தவர்கள் காப்பாற்றினார்கள். எக்ஸ்ரே உதவியுடன் விஜயின் உடலில் இருந்து சுழிக்கியை மருத்துவர்கள் எடுத்தார்கள்.மேலும் விஜய் தற்போது நலமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…