கடலூர்:1500 ஆண்டுகள் பழமையான விருத்தகிரீஸ்வரர் கோயிலில் 3 கோபுரக் கலசங்கள் திருட்டு.பக்தர்கள் அதிர்ச்சி.
கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில்அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் உள்ள 3 கலசங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட 3 கலசங்களிலும் 400 கிராம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த பிப்.மாதம் 6 ஆம் தேதிதான் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு வெகுசிறப்பாக நடைபெற்றது.பல்லாயிரக்கணக்கான மக்கள்,பக்தர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில்,விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் அம்மன் சன்னதி மூலவர் கோபுரத்தில் உள்ள 3 கலசங்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது.இந்த 3 கலசங்களும் 3 அடி உயரம் கொண்டவை என கூறப்படுகிறது.
1500 ஆண்டுகள் பழமையான கோயிலில் இருந்து கலசங்கள் திருடப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து,திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த 3 கலசங்களும் பல லட்சம் அல்லது பல கோடி மதிப்புடையதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…