செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கும் கடைகளுக்கு தடையில்லை.!

Published by
மணிகண்டன்

செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை பழுதுநீக்கும் கடைகள் திறக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகமானது, மே 4 முதல் அடுத்த 2 வாரங்களுக்கான சில தளர்வுகளை விதித்து நேற்று அறிவித்தது. அந்த தளர்வுகளை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அந்த ஆலோசனை கூட்டம் முடிந்து தமிழகத்திற்கான பல்வறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. அதில், கொரோனா பாதிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளே தொடரும் எனவும்,

மற்ற பகுதிகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், செல்போன், கணிப்பொறி, வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை பழுதுநீக்கும் கடைகள் திறக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மால் மற்றும் வணிக வளாகங்கள் தவிர மற்ற தனிக்கடைகளை திறக்க மாவட்டத்தில் உள்ள சூழ்நிலைக்கேற்ப ஆட்சியர் அனுமதி அளிக்கலாம். எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

12 hours ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

13 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

14 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

14 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

15 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

16 hours ago