சேலம் மாவட்டத்திற்கு இந்த 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3 மற்றும் 9 ஆகிய 2 நாட்கள் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
சேலத்தில் ஆக.3 மற்றும் 9-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆடி 18 மற்றும் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி ஆக.3-ம் தேதியும், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி ஆக.9-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கபட்டுள்ளது.