Tamilnadu CM MK Stalin [File Image]
சென்னையில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவின் பேச்சு போட்டி பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார். கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு முதல்வர் பரிசு வழங்கினார்.
இதன்பின் இவ்விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் முக ஸ்டாலின், எப்போதும் என்னை சுறுசுறுப்பாக வைத்து இருப்பவர்கள் மாணவர்களும், இளைஞர்களும் தான். இந்த பேச்சு போட்டிகளின் மூலம் அடையாளம் காணப்பட்ட இளம் பேச்சளர்கள் தான் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் கிடைத்த பரிசு.
பேச்சாற்றலை நம் தமிழ் நிலம் பயண்படுத்திக் கொண்ட வரலாற்றை அனைவரும் அறிந்துக்கொள்ள வேண்டும். திராவிட இயக்கம் என்பதே பேசியும், எழுதியும் வளர்ந்து இருக்கக்கூடிய இயக்கம். திமுக கூட்டங்களை மாலை நேர கல்லூரிகளில் என்று அழைப்பது உண்டு. இளம் பேச்சாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும்.
மாணவர்களே ஒற்றுமை, நல்லிணக்கம், மனித நேயத்தை போற்றுங்கள், எண்ணங்களை அழுக்காக்கும் எண்ணங்களை புறந்தள்ளுங்கள என்றார். மேலும், சிறுபான்மையினர் நலனுக்காக ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இஸ்லாமியர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம் சுயமரியாதை, பகுத்தறிவு என தனி அடையாளம் உண்டு. பண்பட்ட தமிழ் அறிவை எல்லா மாணவர்களும் பெற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…