திருவண்ணமலையில் தங்கியுள்ள அமெரிக்க பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சாமியார் மணிகண்டனை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
திருவண்ணாமலையில் கடந்த 8 மாதங்களாக அத்தியந்தல் அருணாச்சலவேஸ்வர் நகரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கி இருந்தார் அமெரிக்காவை சேர்ந்த 32 வயதுடைய ஆசிலியா. அதே திருவண்ணமலையில் நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி கிராமத்தை சேர்ந்த 34 வயதான மணிகண்டன் என்பவர் கிரிவலப்பாதையில் சாமியார்களுள் ஒருவராக தங்கி வந்துள்ளார். கிரிவலப் பாதையில் சுற்றி திரியும்போது அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அமெரிக்க பெண்ணை பார்த்துள்ளார்.
இதனையடுத்து கடந்த ஒரு மாதமாக அமெரிக்க பெண்ணை மணிகண்டன் கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை அமெரிக்க பெண் ஆசிலியா தனியாக இருப்பதைஅறிந்த மணிகண்டன் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இணைப்பு இருப்பதே கண்டறிந்த மணிகண்டன் அத்துமீறி அவரது வீட்டிற்குச் சென்று அப்பெண்ணை பாலியல் வன்முறை செய்ய முயற்சித்துள்ளார்.
அப்போது அந்த பெண் தன்னை காத்துக்கொள்ள மணிகண்டனை தாக்கி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். தப்பியோட முயன்ற அந்த சாமியாரை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர். அதற்கு பிறகு திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். காயமடைந்த அமெரிக்க பெண் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சாமியார் மணிகண்டன் கைது செய்யப்பட்டு காவல் துறையினர் விசாரணை வளையத்திற்குள் உள்ளார்.
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …