அஞ்சல்துறை தேர்வை மத்திய அரசு தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அஞ்சல்துறைக்கான அக்கவுன்டன்ட் பதவிகளுக்கான தேர்வு வரும் பிப்ரவரி 14 -ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது.எனவே அடுத்தமாதம் நடைபெறவுள்ள அஞ்சல்துறைக்கான தேர்வு அறிவிப்பில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அஞ்சல்துறைக்கான மொழி பட்டியலில் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றுள்ளது.இதனால்அஞ்சல்துறை தேர்வுகளை தமிழ் மொழியிலும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,அஞ்சல்துறைக்கு கணக்கர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்தி,ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இந்த தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு இந்த தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த வேண்டும். அதற்கான அறிவிப்பை வெளியிடும் வரை இத்தேர்வை நடத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…