கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற கோரி மக்கள் நடத்திய பெரும் போராட்டத்தில் காவலர்கள் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும்படி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தீர்ப்பை ரத்து செய்யகோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இது தொடர்பான வழக்கு தற்பொழுதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இது குறித்து பேசியுள் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை வேறு எந்த மாநிலத்திற்கு மாற்றுவதற்கான திட்டம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவுவதற்கான கோரிக்கைகள் வந்தாலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேறு மாநிலத்திற்கு மாற்றும் எண்ணம் இல்லை எனவும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், நேர்மையான தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இத்தனை ஆண்டுகள் ஸ்டெர்லைட் ஆலை மூடியிருந்தாலும், தூத்துக்குடியில் உள்ள ஆயிரக்கணக்கானோருக்கு பணி வழங்கப்பட்டு வருவதாகவும், இதுவரை யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…