தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடந்த போராட்டத்தில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்துக்கு பல தரப்பினர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக விசாரணை நடத்திய நிலையில், தனது இடைக்கால அறிக்கையை நீதிபதி அருணா ஜெகதீசன், அண்மையில் முதல்வரிடம் தாக்கல் செய்தாா். விசாரணை ஆணையத்தின் பதவி காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், விசாரணை நிறைவடையாததால் விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதி வரை (அதாவது மேலும் ஆறு மாதம்) நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்கு முன்பாக விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கால அவகாசம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டதால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 29-வது கட்ட விசாரணையை இன்று தொடங்கவுள்ளது. இதனால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் ஹென்றி திபேன் உள்பட 58 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…