பயணிகள் வண்டிகளை இயக்குவதற்கான கால அட்டவணைகளை அனுப்பி வைத்திட ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வேக்களையும் கேட்டுள்ளதற்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே சாதாரண பயணி வண்டிகளை இயக்காமல் இருப்பதால் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக மதுரை எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் கடந்த ஆக.11 ஆம் தேதி மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனையடுத்து,பயணி வண்டிகளை இயக்குவதற்கான கால அட்டவணைகளை 16.8.2021 க்குள் அனுப்பி வைக்குமாறு ரயில்வே வாரியம் தற்போது அனைத்து ரயில்வேக்களையும் கோரியுள்ளது.
இந்நிலையில்,இதற்காக மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு எம்பி சு.வெங்கடேசன் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“இந்திய ரயில்வே சாதாரண பயணி வண்டிகளை இயக்காமல் இருப்பதால் இந்திய ரயில்வே முழுவதும் அடித்தட்டு மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
இதனை சுட்டிக்காட்டி அவற்றை இயக்கிட ரயில்வே அமைச்சருக்கு நான் கடிதம் எழுதினேன். ரயில்வே அமைச்சரை நானும் வடசென்னை எம் பி கலாநதி வீராச்சாமியும் நேரில் வலியுறுத்தினோம்
இப்போது ரயில்வே வாரியம் இந்திய ரயில்வே முழுவதும் உள்ள ரயில்வே பயணி போக்குவரத்து அதிகாரிகளை பயணி வண்டிகளை மெழு,டெமு, பாரம்பரிய பழைய பயணி வண்டிகளை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்திட வசதியாக ஏற்பாடுகளை செய்திடவும் அவற்றுக்கான கால அட்டவணைகளை 16.8.2021 க்குள் அனுப்பி வைத்திடவும் ரயில்வே வாரியம் அனைத்து ரயில்வேக்களையும் கோரியுள்ளது.
தெற்கு ரயில்வேயில் பயணி போக்குவரத்து அதிகாரி தெற்கு ரயில்வே முழுவதும் அனைத்து கோட்டங்களிலும் அதற்கான கால அட்டவணைகளை தயாரித்து அனுப்புமாறு கேட்டுள்ளார் .அனைத்து கோட்டங்களும் அதற்கான அட்டவணைகளை அனுப்பி வைத்துள்ளனர்.
விரைந்து பயணி வண்டிகள் இந்தியா முழுவதும் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறேன்.ரயில்வே அமைச்சருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”,என்று கூறியுள்ளார்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…