சாதி மறுப்பு திருமணம் : கம்யூனிஸ்ட் அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய பெண் வீட்டார்!

Published by
பால முருகன்

திருநெல்வேலி : மாவட்டத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், பெண்ணுடைய வீட்டார் ஆத்திரமடைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் கண்ணாடி மற்றும் நாற்காலிகள் அங்கிருந்த பொருட்கள் என அனைத்தையும் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாளையங்கோட்டையை சேர்ந்த மதன் (28) என்பவருக்கும் நெல்லை மாவட்டம் பெருமாள்புரத்தை சேர்ந்த உதய தாட்சாயினி என்பவருக்கும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி பாளையங்கோட்டையில் திருமணம் நடைபெற்று இருக்கிறது. கலப்பு திருமணம் என்பதால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  இவர்களுடைய திருமணத்திற்கு ஆதரவும் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, மகள் உதய தாட்சாயினியை காணவில்லை என அவர்களுடைய வீட்டார் காவல்துறையினரிடம் புகார் அளித்து இருந்த நிலையில், மகள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இருக்கும் தகவல் தெரிய வந்து இருக்கிறது. உடனடியாக ஆத்திரம் அடைந்த பெண்ணின் உறவினர்கள் 30க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.

அங்கு சென்று பெண்ணை வீட்டிற்கு வரும் படி அழைத்துள்ளனர். ஆனால், பெண்ணிற்கு விருப்பம் இல்லாத காரணத்தால் அவர் வரவும் மறுத்துள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த பெண்ணின் குடும்பத்தார் வாக்குவாதத்தில் ஈடுபாட்டார்கள். வாக்கு வாதத்தின் போது கட்சி அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகளையும், நாற்காலிகளையும் உடைத்தனர். அத்துடன்  கட்சி நிர்வாகிகளையும் தாக்கியுள்ளனர்.

இதனையடுத்து, திருநெல்வேலி மாநகர காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார்கள். மேலும், திருமணம் செய்த பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல், வெள்ளாளர் முன்னேற்றக் கழக தலைவர் பந்தல் ராஜா உட்பட 13 பேர் கைதாகி இருக்கும் நிலையில். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து யார் யாரெல்லாம் தாக்குதலில் ஈடுபட்டார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், ஜாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவதிற்கு பலரும் கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!

நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…

6 minutes ago

RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…

38 minutes ago

சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…

41 minutes ago

”50வது படத்தில் வித்தியாசமான கெட்டப்.., அது திருநங்கை கெட்டப்” – ரிஸ்க் எடுக்கும் சிம்பு.!!

சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…

1 hour ago

மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ..! ‘பாக்’ வார்த்தையை நீக்கிய கடை.!

ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக்,  இனிப்புகளின் பெயர்களை…

2 hours ago

”இனி அறிக்கை விடக்கூடாது” – ரவி மோகன், ஆர்த்திக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago