தமிழகத்தில் பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் குழுவினருடன், முதல்வர் பழனிசாமி இன்று(செப்டெம்பர்,29) ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் பொது ஊரடங்கு வரும் செப்டெம்பர், 30ம் தேதி வரை அமலில் உள்ளது. எனவே மக்களின் வாழ்வாதாரம் கருதி பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில், திரையரங்குகள், நீச்சல் குளம் போன்றவற்றை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது. திருமணத்தில் 50 பேர்; இறுதி சடங்கில் 25 பேருக்கு மேல் பங்கேற்கக் கூடாது என்பது உட்பட சில கட்டுப்பாடுகளும் உள்ளன. இந்நிலையில், சில மாவட்டங்களில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் அதிகரித்தபடி உள்ளது. எனவே பொது ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது தளர்த்தலாமா என்று அனைத்து மாவட்டஆட்சியர்களுடன் இன்று காலை 10:00 மணிக்கு தலைமை செயலகத்தில்’ காணொளி காட்சி’ வழியே முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார். இதன்பின், மதியம் 3:00 மணிக்கு மருத்துவ நிபுணர்களுடனும் ஆலோசனை நடத்துகிறார். அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…