நீதிக்காகவும், உரிமைக்காகவும் உலகில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு இலங்கை போரின்போது நடந்த ஈழ இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா குழு சமர்ப்பித்த அறிக்கையில், பத்தாண்டுகள் ஆகியும் இலங்கை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால், ஐ.நா.சபை கூட்டத்தில் இனப்படுகொலை குற்றங்களைப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சென்றிடும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இலங்கையில், மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான வாக்கெடுடுப்பு நேற்று நடைபெற இருந்த நிலையில், திட்டமிடலில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக ஒத்துவைக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
இந்த நிலையில், ஐ.நா.சபை கூட்டத்தில் இலங்கை போர்க்குற்றத்திற்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டுமென அதிமுக தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களைவையில் பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, இலங்கை போர்குற்றத்திற்கு எதிராக கொண்டுவந்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சிறுபான்மை இன தமிழர்கள் மீதான இலங்கை அரசின் கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து விசாரணை தேவை என்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்காவிடில், அங்கு அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், நீதிக்காகவும், உரிமைக்காகவும் உலகில் எங்கு போராட்டம் நடைபெற்றாலும் அதற்கு அதிமுக ஆதரவு அளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி : பனிமய மாதா பேராலயத்தின் 443-வது ஆண்டு திருவிழா நேற்று கொடி பவனியுடன் தொடங்கி, இன்று (ஜூலை 26)…
தூத்துக்குடி : தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையம் இன்று (ஜூலை 26, 2025) இரவு 8 மணிக்கு பிரதமர்…
சென்னை : அன்புமணியின் 'தமிழக உரிமை மீட்பு பயணம்' திட்டமிட்டபடி தொடரும் என்று டிஜிபி அலுவலகம் விளக்கமளித்துள்ளது. முன்னதாக, அன்புமணி…
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12 அன்று 10 வயது சிறுமி பள்ளி முடிந்து…
தூத்துக்குடி : 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். தற்போது மாலத்தீவில் உள்ள பிரதமர் அங்கிருந்து…
சென்னை : அன்புமணியின் நடைப்பயணத்துக்கு தடை விதித்து டிஜிபி உத்தரவிட்ட நிலையில், அனுமதி கோரி இன்று சென்னை உயர் நீதிமன்றத்தை…