நாளை தமிழகத்திற்கு புதிய அமைச்சர்.! ஆளுனர் மாளிகையில் பதவி ஏற்பு விழா.!

நாளை தமிழகத்திற்கு புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா ஆளுனர் மாளிகையில் பதவி ஏற்கிறார்.
தமிழக அமைச்சரவையில் தற்போது மாற்றம் நிகழ்ந்துள்ளது. துறை ரீதியாலான செயல்பாடுகள் கொண்டு 35 அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையில் ஒரு அமைச்சரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆவடி நாசர் தமிழக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக, புதிய அமைச்சராக திமுக எம்.பி டி.ஆர்.பாலு மகனும் , மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது திமுக கட்சியில் தொழில்நுட்ப பிரிவை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிதக்கது .
புதிய அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பி.ராஜா நாளை ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு நாசர் கவனித்து வந்த பால்வளத்துறை அளிக்கப்படுமா அல்லது வேறு அமைச்சர்களின் பொறுப்புகள் மாற்றப்பட்டு அதன் மூலம் வேறு துறை ஒதுக்கப்படுமா என்பது நாளை புதிய அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் தெரிவிக்கப்படும்.