லைக்குகளுக்கு ஆசைப்பட்டு சாலையில் குளித்தவருக்கு ₹3500 அபராதம் விதித்தது போக்குவரத்து காவல்துறை…!

fine

ஈரோட்டில் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு சாலையில் குளித்தவருக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.3500 அபராதம் விதிப்பு. 

இன்று பலருக்கு பொழுதுபோக்கு பூங்காவாக இணையதளம் தான் உள்ளது. அதிலும், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யுடியூப் போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் தங்களது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு லைக்கு வாங்க்குதற்காக சிலர் தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஈரோட்டில் லைக்குகளுக்கு ஆசைப்பட்டு சாலையில் சிக்கனலில் நின்ற போது குளித்தவருக்கு போக்குவரத்து காவல்துறை ரூ.3500 அபராதம் விதித்துள்ளது. ஈரோட்டில், இன்ஸ்டாகிராம் லைக்கிற்காக சாலையில் குளித்த இளைஞர் பார்த்திபனுக்கு, ரூ.3500 அபராதம் விதித்துள்ளது ஈரோடு போக்குவரத்து காவல்துறை. ஏற்கனவே, லைக்குகளுக்காக நள்ளிரவில் கிணற்றில் குதிப்பது, சாலையில் படுத்து உறங்குவது, உப்பு கலந்த டீயை அருந்துவது போன்ற விஷயங்களை செய்து இவர் பதிவேற்றம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்