Train Accident [Image Source : Twitter/@niranjan2428]
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி நேற்று இரவு கோரமண்டல் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக எதிரில் வந்த பெங்களூர் யஷ்வந்தபுரம்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்ட கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் மீது மோதி பெரும் விபத்தில் சிக்கியது. இதில், சரக்கு ரயில் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகவும் உருக்குலைந்த ஒரு ரயில் பெட்டியில் மீட்பு பணிகள் நீடித்து வருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் உயிரிழந்து உள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ரயில் விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 35 பேர் பலி என வருவாய் துறை செயலாளர் குமார் ஜெயந்த் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தோரின் உடல்களை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறுப்பினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…