அண்ணாமலை அரசியல் வரலாற்று அறிவு இன்றி பேசுகிறார்.! டிடிவி.தினகரன் கடும் கண்டனம்.!

Published by
மணிகண்டன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி அண்ணாமலை கூறிய கருத்துக்களுக்கு டிடிவி.தினகரன் தனது கண்டன அறிக்கையை பதிவிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அண்மையில் ஒரு ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளிக்கையில், தமிழகத்தில் முன்னாள் முதல்வர்கள் ஊழல் குற்றத்தில் ஈடுபட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள் என கூறியிருந்தார். இந்த கருத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாக குறிப்பிடுவது போல் இருக்கின்றன என அதிமுக தரப்பு பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் முதல்வர் ஓ/பன்னீர்செல்வம் என பலரும் தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் தனது கண்டனத்தை அறிக்கை வாயிலாக பதிவு செய்து உள்ளார். அந்த அறிக்கையில், அண்ணாமலை அரசியல் அறிவு இன்றி ஜெயலலிதா பற்றி கூறி வருகிறார். இது அவரது அறியாமையையும் அனுபவம் இல்லாத தன்மையையும் காட்டுகிறது.

1998 நடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அந்த சமயம் பாஜக ஆட்சி அமைவதற்காக வாஜ்பாய் மற்றும் அத்வானி இருவரும் முயற்சி எடுத்தனர். அப்போது சென்னை மெரினா கடற்கரையில் வேட்பாளர் அறிமுகப்படுத்துதல் கூட்டம் நடத்தி ஜெயலலிதா பற்றி பாஜக தலைவர்கள் புகழ்ந்து பேசியதை உலகம் அறியும்.

அப்போது பாஜக ஆட்சி அமைய வழிவகை செய்தவர் ஜெயலலிதா மட்டுமே. மக்களுக்கு நல்லது செய்வதையே அடிப்படை குணமாக கொண்டவர் ஜெயலலிதா. அவரை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளாமல் பொய் வழக்குகள் போட்டு காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொண்டது திமுக தான் என குற்றம் சாட்டினார்.

எத்தனையோ குற்றச்சாட்டுகளும் பொய் வழக்குகளும் அவர் மீது போடப்பட்டாலும் தமிழகத்தை ஆளும் பொறுப்பு தமிழக மக்களால் ஜெயலலிதா அவர்களிடம் வழங்கப்பட்டது என குறிப்பிட்டார்.  பிரதமர் மோடி கூட ஜெயலலிதாவை போயஸ் கார்டனில் நேரில் சந்தித்து மரியாதையை வெளிப்படுத்தினார்.

தனது பெரும் அறிவை பயன்படுத்தி ஊழல் தொடர்பான கருத்தை கூறும் அண்ணாமலை, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பழனிச்சாமி ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் பற்றி கூற முடியுமா? திமுகவின் சொத்து பட்டியலையும் வெளியிட்டு அண்ணாமலை, மத்திய அரசு மூலம் என்ன நடவடிக்கை எடுத்தார்? ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை உருப்படியான நடவடிக்கை எடுக்க என்ன செய்ய வேண்டும் என சிந்தித்து செயல்பட வேண்டும் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

1 hour ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

1 hour ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

2 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

3 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

3 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

4 hours ago