தூத்துக்குடி விமானம் இயங்குவதற்கான அனுமதி இன்று வழங்கப்பட்டுள்ளதால் சென்னை சேலம் பறக்கிறது தூத்துக்குடி விமானம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல நாடுகள் ஸ்தம்பித்து நிற்கிறது. பல நாடுகளில் லட்சத்தை கடந்து வருகிறது பாதிப்பு. இந்நிலையில், இந்தியாவிலும் இதன் பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளதால், கடந்த 50 நாட்களாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்தது.
இதனால் தூத்துக்குடியிலும் மார்ச் 24 ஆம் தேதிக்கு பிறகு விமான சேவைகள் முடக்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது சில தளர்வுகளை ஏற்படுத்தப்படுகிறது. அதில் ஒன்றாக விமான சேவையை துவங்கலாம் என கூறப்பட்டுள்ளது.
எனவே தூத்துக்குடியில் விமான சேவை இன்று காலை முதல் ஆரம்பமாகியுள்ளது. அதன் படி சென்னையிலுள்ள விமானம் 11.15 க்கு புறப்பட்டு, 12.35 க்கு தூத்துக்குடியை அடையும். அதன் பின்பு 1.30 க்கு தூத்துக்குடியிலிருந்து புறப்படும் விமானம் 3 மணிக்கு சென்னையை அடையும். இம்மாதம் 26,28,30 ஆகிய தேதிகளில் விமான சேவை நடைபெறும்.
அது போல சென்னை முதல் சேலம் செல்லும் விமானமும் இன்று இயக்கப்படுகிறது. அதுவும், இன்று காலை சென்னையிலிருந்து 7.25 க்கு புறப்பட்டு 8.25 க்கு சேலத்தை அடையும், அதன் பின்பு சேலத்திலிருந்து 8.55 க்கு புறப்பட்டு 9.50 க்கு சென்னையை அடையும்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…