சாத்தான்குளம் தந்தை மகன் இரட்டை கொலை – நாளை சிபிஐ விசாரணை!

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகன் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து விசாரணை வருகிறது.விசாரணையில் சிபிஐ விசாரணை நடத்தும் வரை இந்த வழக்கினை சிபிசிஐடி விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.இதன்படி சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டு வருகிறது.ஏற்கனவே 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன் பின்னர் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, சாமத்துரை, தாமஸ் உள்ளிட்ட 5 பேரிடம் விசாரணை நடைபெற்றது.பின் 15 நாள் போலீஸ் காவல் வழங்கியது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் .மேலும் 23-ஆம் தேதி ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. கைதாகியுள்ள காவலர்களை விசாரிக்க நாளை 7 பேர் கொண்ட சி.பி.ஐ குழு மதுரை வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025