முதல்வர் மு.க.ஸ்டாலின் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து திருச்செந்தூர் வரை தற்போது சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரிவாக்கப் பணிக்காக சாலையில் உள்ள மரங்களை அப்புறப்படுத்தும் பணி இன்று காலை தொடங்கியது. அப்போது பத்தமடை அருகே சாலை விரிவாக்கப் பணி நடைபெறும் பொழுது ஜேசிபி இயந்திரத்தின் உதவியைக் கொண்டு மரத்தினை அகற்றினர்.
அந்த மரம் சரியாக அகற்றப்படாமல் சாலை நடுவே வந்து கொண்டிருந்த ஆட்டோ மீது விழுந்துள்ளது. இந்த நிகழ்வின்போது ஆட்டோ ஓட்டுனர் மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த ரஹ்மத் பீவி என்ற பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஆட்டோவில் பயணித்த 3 பேர் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரம் முறிந்து விழுந்ததில் உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு, தலா 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், கட்டுமானப் பணிகளின்போது பாதுகாப்பை உறுதி செய்து, இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காத வகையில் பணியாற்றவும் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…