தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனத்தை எரித்து சேதப்படுத்திய 2 பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம், முதுகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சரவணன் (44), த/பெ. என்பவர் தாளமுத்துநகரில் உள்ள தனது நண்பர் மாரியப்பன் என்பவரின் பாட்டி இறந்ததற்கு துக்கம் விசாரிக்க நேற்று (23.01.2022) சென்றுள்ளார். அப்போது மாரிமுத்து (32) என்பவர் குடிபோதையில் சரவணனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது மாரிமுத்துக்கு ஆதரவாக அவரது நண்பரான தங்கராஜ் (29), என்பவரும் சரவணனுடன் தகராறு செய்து, தாளமுத்து நகர் மெயின் ரோட்டில் நிறுத்தயிருந்த சரவணனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து சேதப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி அவர்கள் வழக்குப்பதிவு செய்து எதிரிகள் தங்கராஜ் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…