Minister Udhayanidhi stalin [Image source : PTI]
நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் வாழ்க்கையில் மத்திய அரசு விளையாடுகிறது என்று விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டது வருந்தத்தக்க விஷயம். மாணவர் ஜெகதீஸ்வரன் இழப்பை கொச்சைப்படுத்தும் விதம் கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வால் மாணவர், அவரது தந்தை தற்கொலை செய்துகொண்டது மிகுந்த வேதனை அளிக்கக்கூடியது. மாணவர்கள் எந்த தவறான முடிவும் எடுக்கக்கூடாது. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக சட்ட போராட்டத்தை தொடர்ந்து நடத்தும். நீட் தேர்வு விவகாரத்தில் மக்களின் மனநிலை தெரியாமல் ஆளுநர் அவருக்கென்று ஒரு தனி மனநிலையில் பேசுகிறார்.
எனவே, மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும், முதலமைச்சர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். கடந்த முறை நான் டெல்லி சென்று பிரதமர் மோடியை பார்த்தபோதும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளேன். திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதனால் மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை இனி எடுக்க கூடாது என்றும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் காலம் விரைவில் வரும் எனவும் கூறினார்.
சென்னை : நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட்…
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…