செய்தியாளர் சந்திப்பில் ‘ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்..’ என கோஷமிட்டு கொண்டே நகர்ந்து சென்ற அமைச்சர் எல்.முருகன்

நேற்று குஜராத் அகமதாபாத் , நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலக கோப்பை கிரிக்கெட் லீக் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியும் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
போட்டி நடைபெற்ற சமயத்தில், பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும் போது, சில ரசிகர்கள், ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் அவர்கள் ஈரோட்டில் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்து செய்தியாளர்களை சந்தித்தார்கள்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரிடம் பாகிஸ்தான் அணி வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆகி பெவிலியன் திரும்பும் போது, சில ரசிகர்கள், ஜெய் ஸ்ரீ ராம் கோஷமிட்டது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்காமல், ‘ஜெய் ஸ்ரீ ராம்.. ஜெய் ஸ்ரீ ராம்..’ என கோஷமிட்டு கொண்டே நகர்ந்து சென்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025