ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் – மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், 2014-ஆம் ஆண்டு பாஜக அரசு பொறுப்பேற்றது முதல், ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு, ரயில்வே துறையை முழுமையாகத் தனியார் துறைக்குத் தாரை வார்த்திடுவதற்கான பரிந்துரைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளது.
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். அமைச்சர்கள் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்றும் வகையில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025