தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்கும் இலங்கையின் உத்தரவு தொடர்பாக பிரதமர் மோடிக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கையில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்களின் 121 விசைப்படகுகளை அழிக்க இலங்கை நீதிமன்றம் நேற்றைய தினம் உத்திரவிட்டிருந்தது . இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக பொது செயலாளருமான வைகோ அவர்கள் கடிதம் ஒன்றை பிரதமர் மோடி மற்றும் அயலுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கும் எழுதியுள்ளார்.
அதில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதில் 60-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டனர் . அதனுடன் பல மீனவர்களை சிறைப்பிடித்ததுடன் அவர்களது வாழ்வாதாரமான விசைப்படகுகளையும் காவலில் வைத்தனர் . அவர்கள் சிறைப்பிடிக்கும் ஒவ்வொரு படகின் மதிப்பும் 25 லட்சம் முதல் 40 லட்சம் வரை .அதனை பல மீனவர்கள் வட்டிக்கு வாங்கிய பணத்தில் வாங்கியது .
கடந்த 50 ஆண்டுகளாக தொடரும் இலங்கையின் அத்துமீறல்களை தடுக்குமாறு பல கோரிக்கைகளை வைத்தும் பலனில்லை .இப்போது தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான 121 படகுகளை அளிக்குமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது . எனவே இந்த பிரச்சினையில் தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும், அவர்களிடமிருந்து மீனவர்களின் படகுகளை மீட்டு தரவோ அல்லது அதற்கான இழப்பீட்டு தொகையை பெற்று தர வேண்டும் என்றும், இதில் தாங்கள் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்று வைகோ அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…