வெளிநாடுகளில் சிக்கி தவித்த 706 பேர் தமிழகம் வருகை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் வண்ணம் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், வெளிநாடுகளில் சிக்கி தவித்த, தமிழக மக்கள் மீண்டும் தமிழகம் வர இயலாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களை மீண்டும் அழைத்து வர, பல ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 43 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது, அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து 7 குழந்தைகள், 30 பெண்கள் உள்பட 68 பேரும், வியட்நாமில் இருந்து 3 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 72 பேரும் சென்னை வந்தனர்.
இதனையடுத்து, 6 சிறப்பு விமானங்களில் வந்த 706 பேரிடமும் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா சோதனை செய்யப்பட்ட பின், அவர்களுக்கு, சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின், தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும், வியட்நாமில் இருந்து வந்த 7 பேர் மட்டும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…