தொழில் நிறுவனத்திற்கான இட ஒதுக்கீட்டுக்கு அனுமதி மறுப்பு.
இந்தியாவில் முக்கியச் சரணாலயங்களில் ஒன்றாகக், செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திகழ்கிறது. இங்கு ஆண்டுதோறும் வெளிநாட்டுப் பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொறித்துச் செல்லும். மேலும், இந்த சரணாலயப் பகுதி மத்திய வனவிலங்கு பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதியை, சுருக்கி ஆணை வெளியிடப்படுவதாகவும், தொழிற்சாலைகள் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனையடுத்து, சன் ஃபார்மா என்ற நிறுவனம் சரணாலயத்தின் அருகில் செயல்பட்டு வருகிற நிலையில், அந்நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய இடம் ஒதுக்கப்படுவதாகவும் அதற்குத் தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் வெண்ணிலா என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கு, இன்று, நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசுத் தரப்பில், தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பாக சன் ஃபார்மா நிறுவனம் மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியைப் பெற்றிருந்தாலும், மத்திய வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் ஒப்புதல் நிராகரிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலை விரிவாக்கம் செய்ய கடந்த மாதம் அனுமதி மறுக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், சரணாலயம் அமைந்திருக்கும் பகுதிகளை மேம்படுத்தும் நோக்கிலேயே 5 கி.மீ. என்ற சுற்றுப் பரப்பளவை 3 கிலோ மீட்டராகக் குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…